எம்மில் சிலர் உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது நடை பயிற்சியை நிறைவு செய்து பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ திடீரென்று மூச்சு திணறல் ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறி ஏற்பட்டால் உங்களுடைய நுரையீரலில் உள்ள தமனிகளில் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.
இத்தகைய பாதிப்பிற்கு தற்போது பல்மனரி ஆர்டரி டீநெர்வேசன் தெரபி ( Pulmonary Artery Denervation Therapy) எனும் சத்திர சிகிச்சை அறிமுகமாகி முழுமையான நிவாரணம் வழங்கி வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நுரையீரல் பகுதியில் எம்மில் பலருக்கும் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்படும். அதாவது நுரையீரலில் உள்ள தமனிகளையும், இதயத்தின் வலது பகுதியையும் பாதிக்கும் ஒரு வகையினதான உயர் குருதி அழுத்தமே இத்தகைய பாதிப்பாகும்.
இத்தகைய பாதிப்பின் போது நுரையீரல் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் இயல்பான அளவைவிட சுருக்கமடைகின்றன அல்லது சேதமடைகின்றன. இதன் காரணமாக நுரையீரல் வழியாக இயங்கும் குருதி ஓட்டம் தடை படுகிறது. இதனால் நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த அழுத்தம் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கிறது.
மேலும் நுரையீரல் வழியாக ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக உழைக்க வேண்டும் என்ற சூழலும் உருவாகிறது. இதன் காரணமாக இதயத் தசை பலவீனமடைந்து இதய செயலிழப்பை உண்டாக்கி, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் தருணங்களில் மூச்சுத்திணறல், தோலில் நிறமாற்றம், மார்பு பகுதியில் அழுத்தம் அல்லது வலி, மயக்கம், சமச்சீரற்ற இதயத்துடிப்பு , சோர்வு , கணுக்கால் , வயிற்றின் மேல் பகுதி ஆகிய இடங்களில் வீக்கம்.. போன்ற அறிகுறிகள் இத்தகைய பாதிப்பினை வெளிப்படுத்துகிறது.
நுரையீரல் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் அதாவது ரத்தநாள சுவர்கள் குறுகுவது விரிவடைவது வீக்கமடைவது கடினமடைவது என பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதால் இதன் வழியாக நடைபெறும் ரத்த ஓட்டத்தில் பாரிய பாதிப்பு உண்டாகிறது. இதன் காரணமாகவே நுரையீரல் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு உரிய தருணத்தில் முறையான மற்றும் முழுமையான நிவாரண சிகிச்சையை பெறாவிட்டால் வலது பகுதி இதயம் சேதமடைந்து இதய செயலிழப்பு ஏற்படக்கூடும். ரத்த உறைவு பாதிப்பு ஏற்படக்கூடும். இதயத்துடிப்பு சமசீரற்றதாகும். நுரையீரல் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படக்கூடும். பேறு காலத்தில் விவரிக்க இயலாத சிக்கல்களை எதிர்கொள்ள கூடும். இதன் காரணமாக நுரையீரல் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் குருதி பரிசோதனை ,மார்பக எக்ஸ்ரே பரிசோதனை, இ சி ஜி பரிசோதனை, எக்கோகார்டியோகிராம் பரிசோதனை, வலது இதய செயல் திறன் குறித்த பிரத்யேக பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை, நுரையீரல் இயங்கு திறன் பரிசோதனை, உறக்கம் தொடர்பான ஆய்வு , நுரையீரல் திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இதன் முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு நுரையீரல் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் எந்த வகையினதான உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை வைத்திய நிபுணர்கள் துல்லியமாக அவதானிப்பார்கள்.
பிறகு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இரத்த நாளங்களை இயல்பாக்குவதற்கான சிகிச்சையை முதன்மையாக மேற்கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவர்.
தற்போது இத்தகைய பாதிப்பிற்கு பல்மனரி ஆர்டரி டீநெர்வேசன் தெரபி எனும் புதிய நவீன சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது. இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் நுரையீரலில் உள்ள தமனி பகுதியில் உயர் குருதி அழுத்தம் சீராக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக கடைப்பிடித்தால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
வைத்தியர் சாம் ஜேக்கப்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM