பாதாள உலக கும்பலின் தலைவரான “மிதிகம ருவனுக்கு” விளக்கமறியல் நீடிப்பு!

13 Dec, 2024 | 05:40 PM
image

பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

“மிதிகம ருவன்” என்பவர் பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “ஹரக் கட்டா”வின் உறவினர் ஆவார்.

இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் “ஹரக் கட்டா” குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“மிதிகம ருவன்” என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுக் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோனகங்கார பகுதியில் உலர்ந்த கஞ்சாவுடன் மூன்று...

2025-02-14 14:49:42
news-image

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள்...

2025-02-14 14:37:24
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு - மூன்று...

2025-02-14 14:48:33
news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47
news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46