இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகளைக் கையாள்வதில் மனிதாபிமானம் மிக்கதும் வினைத்திறனுடனானதுமான அணுகுமுறையை வலியுறுத்தியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விடுதலை குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோருடன் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது இந்திய உயர்ஸ்தானிகர் மீனவர் விவகாரங்களைக் கையாள்வதில் மனிதாபிமானமிக்கதும் வினைத்திறனுடனானதுமான அணுகுமுறையினை வலியுறுத்தியிருந்தார். அத்துடன் கைதான மீனவர்களின் விரைவான விடுதலைக்கும் கோரிக்கைவிடுக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
வட மாகாண மக்களுக்காக இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பு குறித்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், மீன்பிடித்துறையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி உதவித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இழுவைப்படகு முறைமையைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டால் மாத்திரமே மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண முடியும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM