தயாரிப்பு : ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி
நடிகர்கள் : பரத், அபிராமி, அஞ்சலி நாயர், 'தலைவாசல்' விஜய், ராஜாஜி, கனிகா , ஷான், கல்கி , பி ஜி எஸ், அருள் டி . சங்கர் மற்றும் பலர்
இயக்கம் : பிரசாத் முருகன்
மதிப்பீடு : 2.5 / 5
ஆந்தாலஜி பாணியிலான படைப்புகள் தமிழில் இதற்கு முன் வெளியாகி ஓரளவு வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் ஆந்தாலஜி பாணியிலான இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்
வெவ்வேறு களத்தில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நான்கு கதை மாந்தர்களை ஒரு துப்பாக்கி எனும் ஆயுதம் ஒன்றிணைக்கிறது. சமூகத்தில் வெவ்வேறு வாழ்வாதார பிரச்சனைகளுடன் பயணிக்கும் நான்கு கதை மாந்தர்கள் சூழல்களால் உண்டாகும் அழுத்தம் மற்றும் நெருக்கடிக்கு உள்ளாகும் போது அவர்கள் கையில் கிடைக்கும் துப்பாக்கி எனும் ஆயுதத்தை பாவிக்கிறார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
''ஆயுதம் என்பது எப்போதும் எதிராளியையும் தாக்கும். பாவிப்பவர்களையும் தாக்கும் '' எனும் இயல்பான ஆயுத விதிமுறையை அறிமுக இயக்குநர் பிரசாத் முருகன் தனக்கே உரிய பாணியில் திரைக்கதையாக எழுதி, அதனை நான் லீனியர் முறையில் விவரித்திருக்கிறார்.
பரத்- பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன்னை நம்பி வந்த காதல் மனைவி நோயுடன் போராடும் போது அவருக்கு சத்திர சிகிச்சை செய்து பிழைக்க வைக்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. ஓட்டோ சாரதியான பரத் தன்னுடைய அவசரமான அவசியமான பண தேவைக்காக சட்ட விரோத காரியத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக தனக்கு கிடைத்த துப்பாக்கி எனும் ஆயுதத்தை பாவிக்கவும் தயங்கவில்லை. அந்த ஆயுதத்தை பயன்படுத்தி பணத்தை சம்பாதித்து தன் மனைவியை காப்பாற்றினாரா ?இல்லையா ? என்பது ஒரு கதை.
மாநகரத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் அபிராமி - தன் மகனை வைத்தியராக்க வேண்டும் என்று விரும்புகிறார். மகன் தற்போது திருநங்கையாகிவிட்டாலும் அவருக்கு மருத்துவ கல்வியை வழங்கிட வேண்டும் என்று முனைப்புடன் பணியாற்றுகிறார்.
இதற்காக ஒருவரிடம் கடன் வாங்குகிறார். வட்டி கட்ட முடியாததால் கடன் கொடுத்த நபர் பாலின சிறுபான்மையராக மாறி இருக்கும் அவரது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனால் ஆவேசமடையும் அபிராமியின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. அந்த துப்பாக்கியை அவர் பாவித்து தன் மனக் கொந்தளிப்பை அடக்கிக்கொள்கிறாரா? இல்லையா? என்பது மற்றொரு கதை.
அஞ்சலி நாயர் - தன் தந்தையின் கனவை நனவாக்குவதற்காக தன் விருப்பத்தை துறந்து, இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார். தாலி கட்டிய கணவன் தாம்பத்தியத்திற்கு தகுதியற்றவன் என தெரிய வருகிறது. ஆனாலும் அவர் கருவுற்றிருக்கிறார். இந்த சதிக்கான பின்னணியை அவர் கண்டறியும் தருணத்தில் அவரது கையிலும் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அந்தத் துப்பாக்கியை அவர் பாவித்து சதியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாரா? இல்லையா? என்பது மற்றொரு கதை.
தலைவாசல் விஜய்- சாதி வெறிபிடித்த மனிதர். இவரது மகள் பவித்ரா லட்சுமி- தந்தையின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணத்திற்கு தயாராகிறார். காதலரை திருமணம் செய்து கொள்வதற்காக சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்கிறார். இதனால் இந்த தகவலை அறிந்து கொள்ளும் தலைவாசல் விஜய் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார் .
அந்தத் தருணத்தில் அவர் அவருடைய கையிலும் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அந்த துப்பாக்கியை பாவித்து தன் மகளின் தன் விருப்பத்திற்கு எதிரான திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது மற்றொரு கதை.
இப்படி நான்கு கதைகளையும் இணைக்கும் மையப் புள்ளியாக துப்பாக்கி ஒன்று இடம்பெறுகிறது. ஒரே துப்பாக்கியை நான்கு வெவ்வேறு தளங்களில் உள்ள வெவ்வேறு கதாபாத்திரத்தின் கைகளில் எப்படி கிடைக்கிறது என்பதனை இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் இருவரும் சாமர்த்தியமாக விவரித்து ரசிகர்களை 'சபாஷ் 'போட வைக்கிறார்கள்.
நான்கு கதைகள் இருந்தாலும் இதில் நட்சத்திர முகமான பரத்தின் கதாபாத்திரம் தனித்துவமாக தெரிகிறது. அதிலும் அவருடைய கதாபாத்திரத்திற்கான நிறைவு காட்சியில் அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் கம்பீரமாக இடம் பிடிக்கிறார் பரத். இவரைத் தொடர்ந்து தூய்மை பணியாளராக நடித்து துப்பாக்கி எனும் ஆயுதத்தை எப்படி கையாள்வது என தெரியாமல் கையாண்டு, அதன் பிறகு தன் இலட்சியத்தை எட்டும் அபிராமியின் நடிப்பும் மனதில் இடம் பிடிக்கிறது.
அஞ்சலி நாயரின் கதாபாத்திரம் சிக்கலானது என்றாலும் அதனை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் கடத்துகிறார்.
மற்ற கதாபாத்திரங்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை செய்து தங்களின் இருப்பை பதிவு செய்து கொள்கிறார்கள். இந்தப் படைப்பிற்கு ஒளிப்பதிவாளர்- பின்னணி இசையமைப்பாளர் - கலை இயக்குநர்- படத் தொகுப்பாளர்- ஆகியோர் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள். அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றுகிறது.
ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் - கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு ஒன்ஸ்மோர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM