சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த 'கூலி' படக் குழு

Published By: Digital Desk 7

13 Dec, 2024 | 05:40 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் 'கூலி' படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியின் கிளர்வோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டு, அவருடைய ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசை வழங்கி உள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌஃபின் சாகிர் , ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பொலிவுட் நட்சத்திர நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு , இப்படக்குழு அனிருத் இசையில் உருவான பாடலில் இருந்து சிறு காணொளியை கிளர்வோட்டமாக வெளியிட்டுள்ளது.

இதில் சுப்பர் ஸ்டாரின் நடன அசைவுகள் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள இந்த காணொளி குறுகிய கால அவகாசத்திற்குள் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்