விவசாயிகளின் அவல நிலையை உரக்கப் பேசும் 'டிராக்டர்'

Published By: Digital Desk 7

13 Dec, 2024 | 05:37 PM
image

புதுமுக நடிகர் பிரபாகரன் ஜெயராமன் நடிப்பில் உருவாகி இருக்கும் ' டிராக்டர் ' எனும் திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்து வருகிறது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் யந்த்ரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' டிராக்டர் ' எனும் திரைப்படத்தில் பிரபாகரன் ஜெயராமன், ஸ்வீதா பிரதாப்,  மறைந்த நடிகை பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி, ராம் சிவா, மாஸ்டர் கோவர்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கௌதம் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஆர். சுதர்சன் தொகுத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஃப்ரைடே என்டர்டெய்ன்மெண்ட் ( பிரான்ஸ்) நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் ஜெயந்தன் தயாரித்திருக்கிறார்.

கல்வி அறிவு இல்லாத விவசாயிகளை தங்களுடைய சுயலாபத்திற்காக தனியார் நிறுவனங்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள்? என்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த 'டிராக்டர் 'எனும் திரைப்படம் சென்னையில் நடைபெறும் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று திரையிடப்படுகிறது.

பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'டிராக்டர்' எனும் திரைப்படம், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதால் இங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தை விரைவில் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்