சென்னையில் தொடங்கிய 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா

Published By: Digital Desk 7

13 Dec, 2024 | 05:03 PM
image

தமிழக அரசின் அனுசரணையுடன் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.‌

இந்தோ சினி அப்ரிசியேசன் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசின் அனுசரணையுடன் நடைபெறும் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் உள்ள பி வி ஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் சிறப்பாக தொடங்கியது.

இந்நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு மு. பெ .சாமிநாதன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்த தருணத்தில் இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன், சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான ஏ. வி. எம். சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் கே. பாக்யராஜ்- ஆர்.பார்த்திபன் மற்றும் நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பூ சுந்தர் ஆகியோரும் பங்கு பற்றி சிறப்பித்தனர்.

டிசம்பர் 12 ஆம் திகதியன்று தொடங்கும் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்த திரைப்பட விழாவில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த , நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்தியன் பனோரமா பிரிவில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.  விழாவின் இறுதி நாளன்று சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்