மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் முன்னணி நட்சத்திர நடிகராக திகழும் மோகன் லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பரோஸ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்தியேக புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் ' பரோஸ் ' எனும் திரைப்படத்தில் மோகன்லால், மாயா ராவ் வெஸ்ட், குரு சோமசுந்தரம் , துஹின் மேனன், கோமல் சர்மா, விவியா ஷந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் மற்றும் ஹொலிவுட் இசை கலைஞர் மார்க் கில்லியன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபேண்டஸி ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருக்கிறார். ரவி'ஸ் டொக்டர் பி. ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார்.
இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று வெளியிடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதியன்று நத்தார் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.
பரோஸ் எனும் பூதத்திற்கும், எசபெல்லா டி காமா எனும் பெண் பிள்ளைக்கும் இடையேயான உறவை ஃபேண்டஸி கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் பிரம்மாண்டமான படைப்பாக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.
இதனிடையே மலையாளத்தில் உருவாக்கப்பட்டு, இந்திய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற 'மை டியர் குட்டி சாத்தான்' எனும் திரைப்படத்தை போலவே இந்த திரைப்படமும் குழந்தைகளுக்கும், பூதங்களுக்கும் இடையேயான நட்பை விவரித்திருப்பதாலும் மலையாளத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இப்படத்தினை முதன் முதலாக இயக்கியிருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM