கோலாகலமாக நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம்

Published By: Digital Desk 7

13 Dec, 2024 | 05:36 PM
image

நடிகை கீர்த்தி சுரேசுக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அந்தோணி தட்டில் என்பவருக்கும் கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

முன்னாள் நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ்-  'இது என்ன மாயம்' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 'ரஜினிமுருகன்', ' பைரவா ',  'தானா சேர்ந்த கூட்டம்', ' சீம ராஜா ', ' சர்க்கார் ', ' சண்டக்கோழி 2', 'மாமன்னன் ','சைரன் ', ' ரகு தாத்தா'  என ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாகவும் உயர்ந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து பான் இந்திய நட்சத்திர நடிகையாக மிளிர்கிறார்.

இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலரான மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அந்தோணி தட்டில் என்பவருக்கும் இடையே திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணம் கோவாவில் திட்டமிட்டபடி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த பன்னிரண்டாம் திகதியன்று கோலாகலமாக நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்