பிரதி சபாநாயகர் உட்பட மேலும் பலர் போலி பட்டங்களுடன் இருக்கின்றனர் : பெயர் பட்டியலை வெளியிட்டார் பிரேம்நாம் சி தொலவத்த

Published By: Digital Desk 7

14 Dec, 2024 | 09:28 AM
image

(எம்.மனோசித்ரா)

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்வி தகைமைகள் பட்டங்கள் உண்மையானவையாய என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வி தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை.

பாராளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார்.

சபாநாயகர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதி பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது.

மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடிக்கும் உயர் கல்வி தகைமை பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இங்குள்ளது தனிப்பட்ட நபர்கள் குறித்த பிரச்சினையல்ல. ஆனால் இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள். அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனை பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார். மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது.

அரசியலில் கல்வி தகைமையை ஒரு பிரச்சினையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56
news-image

நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள்...

2025-01-23 17:41:01
news-image

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி விபத்து; 8...

2025-01-23 18:53:25
news-image

அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை...

2025-01-23 20:01:09
news-image

புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே...

2025-01-23 18:17:56
news-image

கல்கிஸ்ஸையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-01-23 18:08:21
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்...

2025-01-23 20:49:51
news-image

அமெரிக்கத் தூதுவர் - சுகாதார அமைச்சர்...

2025-01-23 18:46:00