பங்காளிக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டுக்கமையவே தேசியப்பட்டியல் நியமனம் - ரஞ்சித் மத்தும பண்டார

13 Dec, 2024 | 05:10 PM
image

(எம்.மனோசித்ரா)  

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

எனவே ஏனைய உறுப்பினர்களும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என்று நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் நீதிமன்றம் செல்ல முன்னரே தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டது.

எவ்வாறிருப்பினும் 4 தேசிய பட்டியல் ஆசனங்களால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. கோரிக்கை விடுக்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கவும் முடியாது.

 ஹக்கீம் நீதிமன்றம் சென்றாலும், சென்றிருக்காவிட்டாலும் அவருடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே நாம் தீர்மானம் எடுத்திருப்போம்.

எனவே யதார்த்தத்தை உணர்ந்து எவரும் எம்முடன் அல்லது கட்சி தலைமைத்துவத்துடன் கோபமடைய மாட்டார்கள் என்று நம்புகின்றோம். 

இந்த விடயத்துக்காக எவரும் கட்சியை விட்டுச் செல்வார் என நாம் எண்ணவில்லை. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற ரீதியில் அனைவரும் சிந்தித்து செயற்படுவார்கள்.

எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அடுத்து வரும் தேர்தலில்களில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். 

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். முழு நாட்டுக்கும் இந்த அரசாங்கம் நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறது. அதற்கமைய மக்களுக்காக நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24