அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என பலதரப்புகள் தெரிவித்துள்ளதாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சிபிஎஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என பலதரப்புகள் தெரிவித்துள்ளன.பதவியேற்பு நிகழ்வில் மேலும் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் டொனால்ட் டிரம்ப் இதற்கான அழைப்பை விடுத்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த அழைப்பினை சீன ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தெளிவாகவில்லை.
வோசிங்டனில் உள்ள சீன தூதரக பேச்சாளர் இது குறித்து கருத்துதெரிவிக்கவில்லை.
டிரம்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் சீன ஜனாதிபதி குறித்து தொடர்ந்தும் கடும் விமர்சனத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டிரம்ப் தனது வெளிவிவகார செயலாளராக தெரிவு செய்துள்ள மார்க்கோ ருபியோவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தெரிவு செய்யப்பட்டுள்ள மைக்வோல்ட்சும் அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
பதவியேற்றதும் சீன பொருட்களிற்கான வரியை அதிகரிப்பேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM