வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தேசிய மற்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.