குளியாப்பிட்டியவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை !

Published By: Digital Desk 2

13 Dec, 2024 | 10:01 AM
image

குளியாப்பிட்டிய - தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம், நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்தவர் மேற்கு சியம்பலகஸ்ருப்ப , தும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கொலைக்கான காரணம் வெளியாகவில்லை என்பதுடன் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தும்மலசூரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-13 16:25:44
news-image

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

2025-02-13 15:52:58
news-image

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம்...

2025-02-13 15:46:20
news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19