முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க அமைதிப்படை

Published By: Vishnu

13 Dec, 2024 | 02:13 AM
image

கடந்த வருடம் இடம்பெற்ற அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டத்தின் வரலாற்று ரீதியான மீள்தொடக்கத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த தன்னார்வலர்களின் இரண்டாவது குழுவைச் சேர்ந்த 19 அமெரிக்க அமைதிப்படை தன்னார்வலர்கள் வியாழக்கிழமை (12) கொழும்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

ஆழமடையும் அமெரிக்க இலங்கை பங்காண்மை மற்றும் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றம் தொடர்பான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்நிகழ்வு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இத்தன்னார்வலர்களின் குழுவானது சிங்களம் அல்லது தமிழ், இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவிடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற 12 வாரகால தீவிர பயிற்சியினை நிறைவுசெய்துள்ளது.

இலங்கை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து கிராமியப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்துவதற்காக அவர்கள் எதிர் வரும் இரண்டு வருடங்களுக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றுவர்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்த கல்வியமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான நிமாலி பதுரலிய, அமைதிப்படையுடனான எமது ஒத்துழைப்பானது அனைத்து இலங்கையர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆங்கிலமொழிக் கல்வியை மேம்படுத்துகிறது.

எமது பாடசாலைகளுக்கும் சமூகங்களுக்கும் சேவையாற்றுகையில் தமக்கு முன்னாலுள்ள வளமான கலாச்சாரப் பரிமாற்ற வாய்ப்புகளைத் தழுவிக்கொள்ளுமாறு நான் இத்தன்னார்வலர்களை ஊக்குவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார். கல்வியமைச்சினைச் சேர்ந்த மேலதிக செயலாளர் கலாநிதி நிஷாத் ஹந்துன் பத்திரனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56
news-image

நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள்...

2025-01-23 17:41:01
news-image

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி விபத்து; 8...

2025-01-23 18:53:25
news-image

அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை...

2025-01-23 20:01:09
news-image

புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே...

2025-01-23 18:17:56
news-image

கல்கிஸ்ஸையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-01-23 18:08:21
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்...

2025-01-23 20:49:51
news-image

அமெரிக்கத் தூதுவர் - சுகாதார அமைச்சர்...

2025-01-23 18:46:00