சரித் அசலன்க துடுப்பாட்டத்திலும் ட்ரவீன் மெத்யூஸ் பந்துவீச்சிலும் அபாரம்; ஜெவ்னா டைட்டன்ஸ் இரண்டாவது வெற்றி

Published By: Vishnu

13 Dec, 2024 | 01:57 AM
image

(நெவில் அன்தனி)

கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) இரவு நடைபெற்ற லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் கலம்போ ஜகுவார்ஸ் அணியை 40 ஓட்டங்களால் மிக இலகுவாக ஜெவ்னா டைட்டன்ஸ் வெற்றிகொண்டது.

சரித் அசலன்க குவித்த அரைச் சதமும் குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் அவர் பகிர்ந்த 80 ஓட்டங்களும் ஜெவ்னா டைட்டன்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்துக்கொடுத்தது.  

போட்டியின் முதாலாம் நாளானபுதன்கிழமை (11) நடைபெற்ற ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்திய ட்ரவின் மெத்யூஸ் வியாழக்கிழமை (12) போட்டியிலும் திறமையாக பந்தவீசி 3 விக்கெட்களை வீழ்த்தி தனது அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜெவ்னா டைட்டன்ஸ் 10 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் அத்தியாயத்தில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக  இது பதிவானது.

எவ்வாறாயினும் ஜெவ்னா டைட்டன்ஸ் அணியின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

ஏஞ்சலோ மெத்யூஸ் வீசிய முதலாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டொம் கோஹ்லர் கெட்மோர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால், குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

குசல் மெண்டிஸ் 19 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 37 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து அணித் தலைவர் டேவிட் வைஸ் (4) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டம் இழந்தார்.

மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 24 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

டொம் ஆபெல் (13) மாத்திரம் மத்திய வரிசையில் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் அலி கான் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஜகுவார்ஸ் 10 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முன்வரிசையில் ஜேசன் ரோய் (2), கமிந்து மெண்டிஸ் (7), ஏஞ்சலோ மெத்யூஸ் (3) ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டான் லோரன்ஸ் 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து நஜிபுல்லா ஸத்ரான் (17), ஆசிவ் அலி (13)  ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க கலம்போ ஜகுவார்ஸ் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. (74 - 6 விக்.)

அதன் பின்னர் ஒன்பதாவது ஓவரை வீசிய ப்ரமோத் மதுஷான் 5 ஓட்டங்களை மட்டும் கொடுத்து கலம்போ ஜகுவார்ஸ் அணிக்கு நெருக்கடியைக் கொடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இதனால் கடைசி ஓவரை வீசிய அணித் தலைவர் டேவிட் வைஸுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படவில்லை. அவர் அந்த ஓவரில் 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுக்க ஜெவ்னா டைட்டன்ஸ் தனது 2ஆவது தொடர்;சியான வெற்றியை ஈட்டி அணிகள் நிலையில் முதலிடத்தில் உள்ளது.

பந்துவீச்சில் ட்ரவீன் மெத்யூஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ், மல்ஷ தருப்பதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஒரு போட்டி இடையில் கைவிடப்பட்டது மற்றொன்று முழுமையாக கைவிடப்பட்டது

வியாழக்கிழமை (12) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமான கண்டி போல்ட்ஸ்  அணிக்கும்  நுவர எலிய கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மழை காரணமாக 3.3 ஓவர்களுடன் கைவிடப்பட்டதுடன் அடுத்து நடைபெறவிருந்த ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கும் கோல் மார்வல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.

இதற்கு அமைய அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் முதல் இரண்டு நாட்களில் 3 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

முதல் நாளன்று நுவர எலிய கிங்ஸ்  அணிக்கும்   கலம்போ ஜகுவார்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி 6 ஓவர்களுடன் கைவிடப்பட்டிருந்தது.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42