இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை குறைந்தது 220 ரூபாவிற்கு வழங்க முடியும் - நிஹால் செனவிரத்ன

Published By: Vishnu

12 Dec, 2024 | 09:15 PM
image

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரியை 15 ரூபாவினால் குறைத்தால் சில்லறை விலையை நியாயமான முறையில் தீர்மானிக்க முடியும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை குறைந்தது 220 ரூபாவிற்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரிசி இறக்குமதிக்கான வரையறைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், வரிகள் ஏதும் குறைக்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்படும் அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு வரும்போது, கிலோவுக்கு 8 முதல் 10 வீதம் வரை செலவழிக்க நேரிடும்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 440 மெட்றிக் டொன் அரிசியை தனியார் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அரிசிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தால் குறைத்தால் சில்லறை விலையை நியாயமான முறையில் தீர்மானிக்க முடியும். வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.

 இறக்குமதி செய்யப்படும் அரிசியை துறைமுகத்தில் இருந்து விரைவாக விடுவிப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56
news-image

நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள்...

2025-01-23 17:41:01
news-image

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி விபத்து; 8...

2025-01-23 18:53:25
news-image

அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை...

2025-01-23 20:01:09
news-image

புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே...

2025-01-23 18:17:56
news-image

கல்கிஸ்ஸையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-01-23 18:08:21
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்...

2025-01-23 20:49:51
news-image

அமெரிக்கத் தூதுவர் - சுகாதார அமைச்சர்...

2025-01-23 18:46:00