சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் நாளை 19 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பிக்கு மாணவர் ஒருவர் உட்பட 8 மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

குறித்த 8 பேரையும் இன்று நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே அவர்கள் 8 பேரையும் நாளை 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட தீவிர நிலையின்போது காயமடைந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5 பேர் நாராஹேன்பிட்ட பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.