சிங்கர் - எம்சிஏ கிண்ண நொக் அவுட் போட்டி ; சம்பியன் பட்டத்தை பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் சுவீகரித்தது

Published By: Vishnu

12 Dec, 2024 | 07:34 PM
image

(நெவில் அன்தனி)

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய 31ஆவது சிங்கர் - எம்சிஏ (MCA) பிறீமியர் லீக் 2024 நொக் அவுட் இறுதிப் போட்டியில் மெலிபன் பிஸ்கட்ஸ் நிறுவன அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் நிறுவன அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெலிபன் பிஸ்கட்ஸ் நிறுவன அணி 32.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்த மெலிபன் பிஸ்கட்ஸ் நிறுவன அணிக்கு ரனேஷ் சில்வா குவித்த அரைச் சதம் கைகொடுத்தது.

மிகத் திறமையாக 7ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய ரனேஷ் சில்வா 5 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 53 ஓட்டங்களைப் பெற்று அணியை வீழ்ச்சியிலிருந்து நல்ல நிலையில் இட்டார்.

அவரை விட மிலிந்த சிறிவர்தன 32 ஓட்டங்களையும் சங்கீத் குறே 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சாமிக்க குணசேகர 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிமேஷ் விமுக்தி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெயார்பெர்ஸ்ட் 34 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அணியும் ஒரு கட்டத்தில் தடுமாறிக்கொண்டிருந்தது. எனினும் அசேல சிகேரா (29), அனுக் பெர்னாண்டோ (22) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி செர்ந்து 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டனர். அவர்களைவிட கவிரு சென்ஹாஸ் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

மற்றொரு கட்டத்தில் பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் பின்வரிசை வீரர்களின் சாமர்த்தியத்தால் பெயார்பெர்ஸ்ட்   இன்சூரன்ஸ் சம்பியன் பட்டத்தை சூடியது.

பந்துவீச்சில் துஷான் விமுக்தி 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 50 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களையும் கைப்பற்றினர்.

இந்த சுற்றுப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளராக 179 ஓட்டங்களுக்கு 14 விக்கெட்களைக் கைப்பற்றிய BBK பார்ட்னர்ஷிப் அணி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவானார்.

சிறந்த துடுப்பாட்ட வீரராக பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அணி வீரர் மினோத் பானுக்க தெரிவானார். அவர் 6 போட்டிகளில் 309 ஓட்டங்களைப் பெற்றதுடன் CDB பினான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரம் 148 பந்துகளில் 20 சிக்ஸ்கள், 13 பவுண்டறிகளுடன் 232 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்நாயகன் விருதை ஹட்டன் நெஷனல் வங்கி அணி வீரர் சமிந்து விஜேசிங்க (176 ஓட்டங்கள், 10 விக்கெட்கள்) வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42