மற்றொரு L T10 S L போட்டி மழையினால் கைவிடப்பட்டது, மற்றைய ஆட்டங்கள் நடைபெறுவது சந்தேகம்

Published By: Vishnu

12 Dec, 2024 | 07:30 PM
image

(என்.வீ.ஏ.)

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று ஆரம்பமான அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியின் 4ஆவது ஆட்டம் மழையினால் இடையில் கைவிடப்பட்டது.

கண்டி போல்ட்ஸ் அணிக்கும் நுவர எலிய கிங்ஸ் அணிக்கும் இடையில் கண்டி பல்லேகலையில் இன்று பிற்பகல் நடைபெற்ற லங்கா ரி10 சுப்பர் லீக் (L T10 S L) போட்டியே மழை காரணமாக 3.3 ஓவர்களில் கைவிடப்பட்டது.

நேற்றைய தினமும் நுவர எலிய கிங்ஸ் விளையாடிய போட்டி மழையினால் தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கண்டி போல்ட்ஸ் 3.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டம் தடைப்பட்டபோது பெத்தும் நிஸ்ஸன்க 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சந்தர்போல் ஹேம்ராஜ் 7 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் போட்டி  கைவிடப்பட்டது.

பந்துவீச்சில் பெனி ஹவெல் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08