என்­மு­டிவில் எவ்­வித மாற்­றமும்  இல்லை.  அர­சி­ய­லுக்கு வரு­வது குறித்து சரி­யான நேரத்தில் முடி­வெ­டுப்பேன் என்று நடிகர் ரஜி­னிகாந்த் தெரி­வித்­துள்ளார். 

நடிகர் ரஜி­னிகாந்த் 9 வரு­டங்­க­ளுக்குப் பிறகு கடந்த 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை சென்னை கோடம்­பாக்­கத்­தி­லுள்ள ராக­வேந்­திரா கல்­யாண மண்­ட­பத்தில் தனது ரசி­கர்­களை சந்­தித்து அவர்­க­ளுடன் தனிப்­பட்ட முறையில் புகைப்­படம் எடுத்து வரு­கிறார். 

முதல் நாளில் கறுப்பு நிற ஆடையில் வந்து ரசி­கர்­க­ளி­டையே அர­சி­ய­லுக்கு தான் வர­மாட்டேன் என்று நினைப்­ப­வர்கள் ஏமாந்து போவார்கள் என்று தனது அர­சியல் பிர­வேச சர்ச்­சை­க­ளுக்கு பதி­ல­ளித்தார். இதனால் ரஜினி நிச்­சயம் அர­சி­ய­லுக்கு வர வேண்டும் என்ற ரசி­கர்­களின் தாகம் அதி­க­ரித்­துள்­ளது. இரண்டாம் நாளான நேற்­று­முன்­தினம்  வெள்ளை நிற ஆடையில் வந்து ரசி­கர்­க­ளுடன் புகைப்­படம் எடுத்துக் கொண்டார். மூன்றாம் நாளான நேற்று விழுப்­புரம், சிவ­கங்கை, திரு­வண்­ணா­மலை உள்­ளிட்ட மாவட்ட ரசி­கர்­க­ளுடன் புகைப்­படம் எடுத்துக் கொண்ட ரஜினி செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது "அர­சியல் குறித்து நான் இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் கூறிய கருத்தில் எந்த மாற்­றமும் இல்லை, சரி­யான நேரத்தில் சரி­யான முடி­வெ­டுப்பேன்" என்றும் கூறி­யுள்ளார். தன்னை சந்­திக்­காத விரக்­தியில் இருக்கும் ரசி­கர்கள் சிலர் தீக்­கு­ளிக்க உள்­ள­தாக தெரி­வித்­தது குறித்து பதி­ல­ளித்த ரஜினி விடுபட்ட ரசிகர்களுடன் அடுத்தகட்டமாக புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.