மனோ , நிசாம் காரியப்பர், முத்து மொஹம்மட், சுஜீவ சேனசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.க்களானர்

12 Dec, 2024 | 04:04 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தி நீண்ட இழுபறியின் பின்னர் அதன் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நிசாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரது பெயர்கள் வியாழக்கிழமை (12) தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. அவற்றில் முதலாவதாகக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் மாத்திரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் எஞ்சிய 4 ஆசனங்களுக்கான பெயர்கள் தொடர்பில் நீண்ட சர்ச்சை நிலவியது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகள் தமக்கு ஒவ்வொரு ஆசனங்களைக் கோரியதோடு, தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சில முக்கிய உறுப்பினர்களும் தமக்கும் தேசிய பட்டியலில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் துஷார இந்துநில் போன்றோர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்குப் பெயர்களை அனுப்புவதற்குக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து  நிசாம் காரியப்பரின் பெயரையும் உள்ளடக்கி தேசிய பட்டியல் பெயர்கள் வெளியிடப்பட்டன. தமது பெயர்கள் தேசிய பட்டியலுக்குள் உள்வாங்கப்படாவிட்டால் மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்படும் என்று ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் துஷார இந்துநில் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர். ஹர்ஷ டி சில்வா உட்பட பலரும் ஹிருணிகாவுக்கு ஒரு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20