நடிகர் ஆனந்த் நாக் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அறிவான் 'எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தேசிய விருது பெற்ற இயக்குநரான சீனு ராமசாமி , பிரபு சாலமன் , அல்போன்ஸ் புத்திரன் , நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி , விக்ராந்த் , ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் 'அறிவான் ' எனும் திரைப்படத்தில் ஆனந்த் நாக், ஜனனி, ' பொய்ஸ் ' ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர் , சரத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
யஸ்வந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராம் எரா இசையமைத்திருக்கிறார். குற்ற பின்னணியை விசாரிக்கும் புலனாய்வு வகைமையிலான இந்த திரைப்படத்தை எம் டி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் துரை. மகாதேவன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. கதையின் நாயகன் காவல்துறை அதிகாரியாகவும், புலனாய்வு செய்வது போலவும், முதல் தோற்றப் பார்வை வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM