பண்டிகைக் கால ஷொப்பிங்கானது நுகர்வோர் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது, கடனட்டை மற்றும் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்காக அதன் வருடாந்த ஆண்டு இறுதி விலைக்கழிவு சலுகை பொனான்ஸாவை வெளியிட்டது.
இலங்கை முழுவதும் உள்ள 4,000 வர்த்தக விற்பனை நிலையங்கள் 2024 டிசம்பர் 31 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் 50மூ வரையிலான விலைக்கழிவு சலுகையை அதன் அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
இந்த விலைக்கழிவு சலுகைகள் 187 வர்த்தக பங்குதாரர்களான ஆடை மற்றும் ஆடை அணிகலன் விற்பனையாளர்கள், 62 வாழ்க்கை முறை உற்பத்தி பங்குதாரர்கள், 26 காலணிகள் விற்பனை பங்குதாரர்கள் மற்றும் தோல் பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள், 74 ஹோட்டல் பங்குதாரர்கள், 22 ஆபரண பங்குதாரர்கள், 18 சுகாதார பராமரிப்பு பங்குதாரர்கள், ஒன்பது சிகையலங்கார நிலையங்கள், ஸ்பா மற்றும் அழகுசாதனப் பங்குதாரர்கள், ஐந்து அங்காடிச் சந்தை பங்குதாரர்கள் ஒன்பது வாகன விற்பனை பங்குதாரர்கள், ஆறு கடிகாரங்கள் மற்றும் அணிகலன்கள் பங்குதாரர்கள் மற்றும் ஏழு உணவு பங்குதாரர்கள் ஆகியோரால் வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, 90 இணையத்தள விற்பனையாளர் பங்குதாரர்கள் இந்த பண்டிகை ஊக்குவிப்பு காலத்தில் கொமர்ஷல் வங்கியின் கடனட்டை மற்றும் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விலைக்கழிவு சலுகைகளை வழங்கவுள்ளனர்.
இந்த ஊக்குவிப்பு குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் அட்டை நிலையத்தின் தலைவர் திரு நிஷாந்த டி சில்வா, 'எங்கள் பருவகால அட்டை ஊக்குவிப்பு ஒவ்வொரு வருடமும் விரிவாக்கப்பட்டு வருகிறது, மேலும் பல வர்த்தக பங்குதாரர்கள் இந்த திட்டத்தில் இணைந்திருப்பதால், அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, கொமர்ஷல் வங்கி அட்டை ஊக்குவிப்புத் தொழிலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவும், சலுகையில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் மிகவும் மாறுபட்ட ஒன்றாகவும் மாறியுள்ளது. பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் போது சேமிக்க இது ஒரு சிறந்தவாய்ப்பாக திகழ்கிறது.
இந்த பண்டிகைக்கால ஊக்குவிப்பில் பங்குபெறும் வர்த்தகர்கள் மிகப்பெரிய அளவிலான சலுகைகளை வழங்குகின்றனர், வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும் பரந்த அளவிலான விற்பனை நிலையங்களில் இருந்து ஏராளமான விலைக்கழிவு சலுகைகள் கிடைக்கின்றன.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (ளுஆநு) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. மற்றும் இலங்கையின் முதல் 100மூ கார்பன் நடுநிலைமை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 வங்கிக்கிளைகள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான முதற்தர வங்கி ஆகியவையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM