இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது சுவமக சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தினூடாக, சமூக நலன் பேணும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது.
அனைவரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றும் நலனை மேம்படுத்துவது எனும் தனது வர்த்தக நாம நோக்கத்துக்கமைய, இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நீரிழிவு நோய் நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
நீரிழிவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பது மற்றும் ஆரம்ப கட்டத்தில் இனங்காண்பது மற்றும் இடர் முகாமைத்துவம், சமூக ஈடுபாட்டை கட்டியெழுப்புவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் 90 நாட்களுக்குள், 10,000க்கும் அதிகமானவர்களை இந்தத் திட்டம் சென்றடைந்துள்ளதுடன், தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
முற்றிலும் இலவசமான நீரிழிவு பரிசோதனை சேவைகளை குறிப்பிடலாம். யூனியன் அஷ்யூரன்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாத, சகல வயதினருக்கும் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த வசதி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் இடங்களில் வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பங்குபற்றுனருக்கும் பரந்த நீரிழிவு பரிசோதனை அறிக்கை வழங்கப்படுவதுடன், அதில் மருத்துவ ஆலோசனையும் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதனூடாக, அவர்களுக்கு ஆரம்பத்தில் கட்டுப்பாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. பாரதூரமான நிலைகளில், தமக்கு நீரிழிவு இருப்பதை முன்னர் அறிந்திராதவர்கள், அருகாமையிலுள்ள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM