சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இஸ்ரேலிற்கு எதிரான வாசகங்கள் - கார் தீக்கிரை

12 Dec, 2024 | 07:41 AM
image

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் கார்களை சேதப்படுத்தியுள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிரான வாசகங்களை எழுதி சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் யூதவழிபாட்டு தலம் சேதமாக்கப்பட்டதால் உண்டான பதற்றநிலை நீடிக்கின்ற நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சிட்னியின் வுலஹராவின் புறநகர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மக்னேவீதிக்கு தாங்கள் அழைக்கப்பட்டதாகவும் அங்கு சென்றவேளை கார் ஒன்று எரிந்துகொண்டிருப்பதை பார்த்தாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் அருகில் இஸ்ரேலை கொலை செய்யுங்கள் என எழுதப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றவேளை அந்த பகுதியில் காணப்பட்ட 15 முதல் 20 வயதிற்குற்பட்ட இருவர் மீது சந்தேகம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் மதில் மீதும்அருகிலும் அவர்கள் எழுதிச்சென்றுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு வாசகம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இது சமூகத்தில் அச்சத்தை  ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55
news-image

கர்நாடகா | லாரி பள்ளத்தில் கவிழ்ந்த...

2025-01-22 13:49:37
news-image

புட்டினை சந்திப்பது முதல் காசா யுத்த...

2025-01-22 12:25:36
news-image

சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத...

2025-01-22 11:00:00
news-image

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர்...

2025-01-22 10:39:28
news-image

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு...

2025-01-22 07:25:56