(நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற கண்டி போல்ட்ஸ் அணிக்கும் கோல் மார்வல்ஸ் அணிக்கும் இடையிலான லங்கா ரி 10 சுப்பர் லீக் கிரிக்கெட்டின் 3ஆவது போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
இரண்டாவது போட்டி இடையில் கைவிடப்பட்ட போதிலும் 3ஆவது போட்டி எவ்வித தடையுமின்றி நடைபெற்றது.
கண்டி போல்ட்ஸ் சார்பாக தினேஷ் சந்திமால் குவித்த அரைச் சதம், கோல் மார்வல்ஸ் அணியின் அண்ட்ரே ப்ளெச்சரின் ஆக்ரோஷமா அதிரடித் துடுப்பாட்டம் அதனை வீணடித்து விட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கண்டி போல்ட்ஸ் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்காவில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்காக விளையாடிவிட்டு நாடு திரும்பிய சூட்டோடு கண்டி போல்ட்ஸ் அணியில் இணைந்த தினேஷ் சந்திமால் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 66 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால் அவர் குவித்த அரைச் சதம் வீண்போனது.
25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டறிகளையும் 5 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.
அவரை விட அணித் தலைவர் திசர பெரேரா (10) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொட்டார்.
பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் அணி 7.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் அண்ட்றே ப்ளெச்சர் 21 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 23 ஓட்டங்களையும் ஷக்கிப் அல் ஹசன் 8 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் சந்துன் வீரக்கொடி 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இமாத் வசிம் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM