(நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற நுவர எலிய கிங்ஸ் அணிக்கும் கலம்போ ஜகுவார்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது லங்கா ரி 10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக முடிவு கிட்டவில்லை.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நுவர எலிய கிங்ஸ் அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் தடைப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர்.
அவிஷ்க பெர்னாண்டோவும் தனுஷ்க குணதிலக்கவும் 30 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மந்த கதியில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தனுஷ்க குணதிலக்க சுய ஆட்டமிழப்பை அறிவித்தார்.
6ஆவது ஓவர் நிறைவில் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அவிஷ்க பெர்னாண்டோ 18 பந்துகளில் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
உமர் அக்மால் ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்தப் போட்டியில் முடிவு கிட்டாததை அடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM