(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டின் ஆரம்பப் போட்டியில் ஹம்பாந்தொட்ட பங்களா டைகர்ஸ் அணியை 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஜெவ்னா டைட்டன்ஸ் வெற்றிகொண்டது.
கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஆகியவற்றின் முன்னாள் வீரர் ட்ரவீன் மெத்யூஸின் 4 விக்கெட் குவியல், இங்கிலாந்து வீரர்களான டொம் கோஹ்லர் கெட்மோர், டொம் ஆபெல் (இம்பெக்ட் வீரர்) ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன ஜெவ்னா டைட்டன்ஸை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை நேற்று பிற்பகல் நடைபெற்ற கோலாகல ஆரம்ப விழாவைத் தொர்ந்து இப் போட்டி நடைபெற்றது.
அப் போட்டியில் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் நிர்ணயித்த 107 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா டைட்டன்ஸ் 8.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
நவனிது பெர்னாண்டோ (0), சரித் அசலன்க (12) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தது.
இக்கட்டான சூழ்நிலையில் சேர்ந்த டொம் கோஹ்லர் கெட்மோர், டொம் ஆபேல் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து ஜெவ்னா டைட்டன்ஸை வெற்றிபெறச் செய்தனர்.
டொம் கோஹ்லர் கெட்மோர் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 51 ஓட்டங்களுடனும் டொம் ஆபெல் 19 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் இசுறு உதான, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி 10 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் பெரேராவை தனது முதலாவது பந்திலேயே பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொஹமத் ஆமிர் ஆட்டம் இழக்கச் செய்தார்.
எனினும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் வீரர் மொஹம்மத் ஷாஸாத், அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
17 பந்துகளை எதிர்கொண்ட தசுன் ஷானக்க 4 பவுண்டறிகள் 5 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களைக் குவித்தார்.
மொஹம்மத் ஷாஸாத் 22 ஓட்டங்களையும் தனஞ்சய லக்ஷான் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ட்ரவீன் மெத்யூஸ் 2 ஓவர்களில் 10 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ட்வெய்ன் ப்ரிட்டொரியஸ், ப்ரமோத் மதுஷான், மொஹமத் ஆமிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM