புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ஆனார் பைசர் முஸ்தபா! 

11 Dec, 2024 | 06:39 PM
image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை  வெளியிட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை பெற்றது. 

அந்த ஆசனங்களில் ஓர் ஆசனத்துக்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு ஆசனத்துக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும் இது குறித்து பங்காளி கட்சிகளுடன் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிய ஜனநாயக முன்னிணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அதன் செயலாளருக்கு கிடையாது என்றும், பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளி கட்சிகளுக்கும் அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியில் மூவர் வெற்றி பெற்றதோடு, இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன. கடந்த நவம்பரில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒருவராக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இவ்வாறான கருத்துக்களே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பைசர் முஸ்தபாவின் நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56