முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (10) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர் போராட்டக்காரர்களை அருகே சென்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்தபோது, இவ்விடத்தில் ஒவ்வொரு உறவுகளையும் புகைப்படம் எடுக்கவேண்டிய தேவை என்ன என கூறி, அந்த இராணுவ புலனாய்வாளரை துரத்தியுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்களை இராணுவத்தினர், பொலிஸார் , சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் போன்றோர் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களை சிவில் உடை தரித்த புலனாய்வாளர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM