துறைநீலாவணையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

11 Dec, 2024 | 05:04 PM
image

கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று புதன்கிழமை (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மத்திய முகாம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 43 மற்றும் 39 வயதுடையவர்கள் ஆவர். 

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா,  கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியிலிருந்து பேருந்து  ஊடாக கடத்தப்பட்டு, பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25