கைதான நபரை பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்திய போலி பொலிஸ் உத்தியோகத்தர் கைது

11 Dec, 2024 | 04:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி, கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா, களனிமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபர், தன்னை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி, முல்லேரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு, கடந்த முதலாம் திகதி முல்லேரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவு பெறப்பட்டது. 

சந்தேக நபர் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தெல்கொட பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையடித்த நகைகளைச் சந்தேக நபர் வெவ்வேறு பிரதேசங்களில் உள்ள தங்க நகை அடகு வைக்கும் நிலையங்களில் அடகு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 52 வயதுடைய காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், இந்த கொள்ளைச்சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றுமொருவர் குறித்த சந்தேக நபரின் உதவியுடன் களனிமுல்ல பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். 

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபர் கடந்த 2022ஆம் ஆண்டு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17
news-image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து...

2025-01-24 22:22:24
news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17