பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி விநியோகிப்பதை தாமதப்படுத்துகிறார்கள் - சிறு, நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள்

11 Dec, 2024 | 05:47 PM
image

(இராஜதுரை ஹஷான்) 

தாம் எதிர்பார்த்த விலையேற்றம் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படாத காரணத்தால் பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு அரிசி விநியோகிப்பதை தாமதப்படுத்துகிறார்கள்.  

பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானியை மீளப்பெற வேண்டிய அவசியம் கிடையாது என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜே.கே. சேமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதை மீளப்பெறுமாறு பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது. 

திட்டமிட்ட வகையில் சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை ஒருசில அரிசி உற்பத்தியாளர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.  

தாம் எதிர்பார்த்த வகையில் அரிசியின் விலை அதிகரிக்காத காரணத்தால் பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதை தாமதப்படுத்துகிறார்கள். 

பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாமல், நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை கடுமையான முறையில் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.  

பிரதான அரிசி உற்பத்தியாளர்களுக்கு அடிபணியாமல் செயற்பட்டால் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணலாம். 

அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும். அரிசியை போன்று சகல அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை தொடர்ச்சியாக சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00