பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற 545 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது :
பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புகளை அமைப்பதற்குரிய பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது அமைச்சின் செயலாளர் கூறினார் எனவும், மாடி வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
தேசிய மக்கள் சக்தி மீது சேறு பூசுவதற்காக இன்று பல குழுக்களும், தோல்வி அடைந்த கட்சிகளும் செயற்பட்டு வருகின்றன. சொல்லாததை சொன்னதாகவும், செய்யாததை செய்ததாகவும் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
அவ்வாறான எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை. எனவே, வதந்திகளை பரப்பி மக்களை அச்சப்படுத்தாமல், உண்மையை எடுத்துக்கூறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி இன்னும் ஒரு வருடம்தான் செல்லும் என அரசியல் ரீதியில் வங்கரோத்தடைந்தவர்கள் கூறிவருகின்றனர். மக்கள் எந்த நோக்கத்துக்காக வாக்களித்தார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வரை எமது ஆட்சியை கவிழ்க்க முடியாது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கும் மிக விரைவில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM