சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை ரட்சிதா மகாலட்சுமி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' எக்ஸ்ட்ரீம் ' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார்- பேரரசு - ராஜகுமாரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டனர்.
இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ' எக்ஸ்ட்ரீம் ' படத்தில் ரட்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா, ராஜ்குமார், சிவம், ராஜேஸ்வரி, அம்ரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி ஜெ பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர். எஸ். ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஸீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. கமலாகுமாரி மற்றும் என். ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின் ஓடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் பங்குபற்றி இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா பேசுகையில், '' எம்முடைய முதல் திரைப்படமான 'தூவல்' திரைப்படத்தில் இயற்கையை தவறாக பயன்படுத்தினால் அது எம்மாதிரியான பின் விளைவை உண்டாக்கும் என்பதனை விவரித்திருந்தேன்.
இந்தத் திரைப்படத்தில் பெண்களைப் பற்றியும் , பெண்மணிகளை பற்றியும் பேசி இருக்கிறோம். விவாதத்திற்குரிய கருவினை மையப்படுத்தி கதையை எழுதியிருக்கிறோம். பெண்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது அதிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்ளலாம்? என்பதனை விறுவிறுப்பாக விவரித்திருக்கிறோம்.
ஒரு படைப்பாளியின் படைப்பு எப்படி இருக்க வேண்டும்? என்பதனை சமூகம் தான் தீர்மானிக்கிறது. எக்ஸ்ட்ரீம் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM