சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள் மற்றும் பாத்பைன்டர் பவுன்டேஷன் பிரதிநிதிகள் சந்திப்பு

Published By: Digital Desk 7

11 Dec, 2024 | 05:29 PM
image

நாட்டுக்கு வருகைதந்திருக்கும் பெய்ஜிங்கின் இராணுவ விஞ்ஞான அகடமியின் ஆய்வாளர்களுக்கும் பாத்பைன்டர் பவுன்டேஷன் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பேலியகொடவில் அமைந்திருக்கும் அவ்வமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.

பாத்பைன்டர் பவுன்டேஷன் அமைப்புடனான தொடர்புகளை வலுப்படுத்துவதுடன், இருதரப்பினருக்கும் நன்மையளிக்கக்கூடிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்திருக்கும் பெய்ஜிங் இராணுவ சட்டக்கட்டமைப்பு கற்கைகள் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் இராணுவ விஞ்ஞான அகடமியின் பிரதிநிதிகள், இலங்கையும் சீனாவும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஏதுவான புதிய வாய்ப்புக்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தனர்.

அத்தோடு இவ்விருதரப்பு சந்திப்பின்போது ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டத்தின் பின்னணியில் சீன - இலங்கை உறவு, இருநாடுகளினதும் பாதுகாப்புத்துறை ஒழுங்குகள் மற்றும் இராணுவ சட்டக்கட்டமைப்பு தொடர்பான ஒப்பீடு, பாத்பைன்டர் பவுன்டேஷன் போன்ற வெற்றிகரமான இராஜதந்திர கொள்கைசார் அமைப்பை நிறுவுவதற்கான அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00