சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் "கலாநிதி ” பட்டம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் சபாநாயகருடனான தொடர்புகளைப் பேணுவதை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து கீதநாத் காசிலிங்கம் கூறுகையில்,
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் "கலாநிதி ” பட்டம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியள்ளனர். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுடன் தொடர்புகளைப் பேணுவதை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும்.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனக்கு "கலாநிதி” பட்டம் கழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் கலாநிதி பட்டம் பெறவில்லை. நாட்டின் சபாநாயகர் தனது தகுதிகளைத் தவறாகச் சித்தரித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தாம் நம்புவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM