(எம்.எம்.சில்வெஸ்டர்)
2028 ஆம் ஆண்டு, இலங்கை மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக் வெற்றிகளை எதிர்பார்க்கக்கூடிய ஆண்டாக அமைய செய்வதற்கான சகல விடயங்களையும் முன்னெடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார்.
விளையாட்டுத்துறையில் இருந்து அரசியலை முற்றாக அகற்றப்படும் என உறுதியளித்த பிரதி அமைச்சர், சகல விளையாட்டுகளையும் ஒலிம்பிக்கில் பங்கேற்க செய்வதற்கான திட்டத்தை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத்தின் முதல் வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“ எமது நாட்டில் விளையாட்டுகளை ஒரே இடத்தில் தேக்கி வைப்பதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன், விளையாட்டு சங்கங்களில் நிலவும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.
விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றித்து பயணிப்பது அவசியம். இலங்கையின் அனைத்து விளையாட்டுகளையும் சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை பெறச் செய்வது எமது பொறுப்பாகும்.
2028 ஆம் ஆண்டை ஒலிம்பிக்கிற்கான ஆண்டாக மாற்றுவோம். எதிர்நோக்க 2028 ஆம் ஆண்டை ஆக்குவோம். 2028 ஆம் ஆண்டு, இலங்கை மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக் வெற்றிகளை எதிர்பார்க்கக்கூடிய ஆண்டாக அமைய செய்வதற்கான சகல விடயங்களையும் முன்னெடுக்கப்படும்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வளமான மற்றும் அழகானதொரு தேசத்தை கட்டியெழுப்பும் கனவை, விளையாட்டின் மூலமாக நனவாக்குவோம்” என்றார்.
அண்மையில் நடைபெற்ற நான்காவது தேசிய வில்வித்தை சம்பியன்ஷிப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM