இலங்கையின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமான கண்டியை ஆண்ட அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் என்பன மக்கள் பார்வைக்காக இன்று புதன்கிழமை (11) மீண்டும் திறக்கப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த திறப்பு விழாவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த கலாச்சார பாதுகாப்பு திட்டமானது அமெரிக்க தூதரகத்தின் நிதி உதவியின் கீழ் கலாச்சார அமைச்சு மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது வரலாற்று உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
இதன் மூலம் இலங்கை மற்றும் உலகளாவிய ரீதியில் பார்வையாளர்களின் அணுகல் மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்த முடியும்.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பை எடுத்துக்காட்ட முடிகின்றது.
சுற்றுலா அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் கண்டியை ஆண்ட அரசர்களின் அரண்மனை பாதுகாத்தல் மூலம் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவு கட்டியெழுப்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM