(நெவில் அன்தனி)
ஆசிய கால்பந்தாட்ட கூட்டு சம்மேளன AFC ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027 தகுதிகாண் சுற்றின் 3ஆவதும் கடைசியுமான சுற்றுக்கான டி குழுவில் இலங்கை உலக தரவரிசையின் பிரகாரம் நான்காவது அணியாக நிரல்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள AFC தலைமையகத்தில் அணிகளைக் குழுநிலைப் படுத்தும் வைபவம் உத்தியோகபூர்வமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்தக் கடைசி தகுதிகாண் சுற்றில் 24 அணிகள், 6 குழுக்களில் தலா 4 அணிகள் வீதம் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.
இந்த 6 குழுக்களிலும் லீக் சுற்று முடிவில் முதலிடங்களைப் பெறும் அணிகள் மாத்திரமே இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இந்த 6 அணிகளும் தற்போது நடைபெற்றுவரும் பீபா 2026 உலகக் கிண்ண (Road to 26) தகுதிகாண் சுற்றில் விளையாடிவரும் 18 அணிகளுடன் இறுதிச் சுற்றில் இணைந்துகொள்ளும். போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடான சவூதி அரேபியா நேரடியாக விளையாட தகுதிபெற்றுள்ளது.
கம்போடியாவுக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் 4 - 2 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்றதன் மூலம் தகுதிகாண் சுற்றின் 3ஆவதும் கடைசியுமான சுற்றில் விளையாட தகதிபெற்ற இலங்கை. சற்று கடினமான டி குழுவில் இடம்பெறுகிறது.
உலகக் கால்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் 97ஆம் இடத்திலுள்ள தாய்லாந்து, 143ஆம் இடத்திலுள்ள துர்க்மேனிஸ்தான், 165ஆம் இடத்திலுள்ள சைனீஸ் தாய்ப்பே ஆகிய அணிகளுடன் 200ஆம் இடத்திலுள்ள இலங்கை டி குழுவில் இடம்பெறுகிறது.
இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் டி குழுவுக்கான முதலாம் கட்டத்தில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் தாய்லாந்தை 2025 மார்ச் 25ஆம் திகதி எதிர்த்தாடும்.
தொடர்ந்து 2025 ஜூன் 10ஆம் திகதி சைனீஸ் தாய்ப்பேயையும் 2025 அக்டோபர் 9ஆம் திகதி துர்க்மேனிஸ்தானையும் இலங்கை சந்திக்கும்.
இரண்டாம் கட்டத்தின் முதலாவது போட்டியில் துர்க்மேனிஸ்தானை 2025 அக்டோபர் 14ஆம் திகதியும் இரண்டாவது போட்டியில் தாய்லாந்தை 2025 நவம்பர் 18ஆம் திகதியும் கடைசிப் போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயை 2026 மார்ச் 31ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.
இப் பொட்டிகள் எந்தெந்த இடங்களில் நடைபெறும் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால். 3 போட்டிகள் பெரும்பாலும் இலங்கையில் நடைபெறும் என நம்பப்படுகிறது.
6 குழுக்களில் இடம்பெறும் அணிகள்
ஏ குழு: தஜிகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மாலைத்தீவுகள், திமோர்-லெஸ்டே.
பி குழு லெபனான், யேமன், பூட்டான், புருணே தருசலாம்.
சி குழு: இந்தியா, ஹொங்கொங் சைனா, சிங்கப்பூர், பங்களாதேஷ்.
டி குழு: தாய்லாந்து, துர்க்மேனிஸ்தான், சைனீஸ் தாய்ப்பே, இலங்கை.
ஈ குழு: சிரியா, ஆப்கானிஸ்தான், மியன்மார், பாகிஸ்தான்.
எவ் குழு: வியட்நாம், மலேசியா, நேபாளம், லாஓஸ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM