'செல்ஃபி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் குணாநிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அலங்கு' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அலங்கு' எனும் திரைப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத் , காளி வெங்கட் , சரத் அப்பாணி, ஸ்ரீ ரேகா , கொற்றவை , ரெஜின் ரோஸ் , சண்முகம் முத்துச்சாமி , மாஸ்டர் அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜீஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை டி ஜி ஃபிலிம் கம்பனி மற்றும் மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டி . சபரீஷ் மற்றும் சங்க மித்ரா சௌமியா அன்புமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இதில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி என்பது தமிழக அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டொக்டர் ராமதாஸின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் தற்போது முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் தமிழக மற்றும் கேரள ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் குறித்த காட்சிகள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM