(எம்.சி.நஜிமுதீன்)

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலா சம்பந்தமானது வர்த்தக, பொருளாதார, அரசியலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதனையும் தாண்டி இராணுவத் தொடர்பும் உள்ளது.  அந்த  இராணுவத் தொடர்பானது அமெரிக்கா வரையில் பரவலாக்கம் அடையக்கூடியது. அமெரிக்க சம்பந்தப்பட்டிருப்பதனால் இலங்கை உலக யுத்த நெருக்கடியில் சிக்கும் அபாயம் ஏறபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலார் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.