நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published By: Digital Desk 7

11 Dec, 2024 | 05:04 PM
image

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரணி காளிங்கராயர் ஆகியோரின் திருமண வரவேற்பில் பங்கு பற்றி, தம்பதிகளுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம். இப்படத்தை தொடர்ந்து 'புத்தம் புது காலை', 'பாவ கதைகள்' ஆகிய ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

மேலும் கமல்ஹாசன் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற 'விக்ரம்' படத்திலும் நடித்து பிரபலமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரங்கள் நகர்கிறது' , 'போர்', ' இந்தியன் 2 ', 'ராயன்' ஆகிய படங்களிலும் நடித்து பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருகிறார்.

இவருக்கும், இவருடைய நீண்ட நாள் காதலியான தாரணி காளிங்கராயர் என்பவருக்கும்  பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண நிச்சயம் நடைபெற்றது.  அதன் படி இவர்களின் திருமணம் கடந்த எட்டாம் திகதி குருவாயூரிலுள்ள குருவாயூரப்பன் ஆலயத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின், அவருடைய துணைவியார் துர்கா ஸ்டாலின் ஆகியோர் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.‌

இந்நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22
news-image

புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும்...

2025-01-23 15:03:08
news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25