பிறந்தது முதல் பதினைந்து வயதிற்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்களில் சிலருக்கு ஏற்படும் அரிதான எலும்பு புற்றுநோய் பாதிப்புகளில் எவீங் சர்கோமா எனப்படும் எலும்பு புற்றுநோய் பாதிப்பும் ஒன்றாகும். இத்தகைய புற்றுநோய் பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்தால் அதனை ஒருங்கிணைந்த நவீன சிகிச்சை மூலம் முழுமையாக நிவாரணம் அளிக்க முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைகள் பிறந்து அவர்களுடைய எலும்புகள் வளர்ந்து உறுதி அடையும் தருணத்தில் மரபணு குறைபாடு காரணமாக சிலருக்கு அவர்களுடைய எலும்புகளில் உள்ள செல்கள் அசாதாரண முறையில் வளர்ச்சி அடைந்து புற்று நோயாக பாதிக்கிறது.
இது குறிப்பாக பதினைந்து வயதிற்குட்பட்ட ஆண், பெண்களுக்கு ஏற்படுகிறது. மிக அரிதாகவே எந்த வயதிலும் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
மேலும் எவீங் சர்கோமா எனும் பாதிப்பு கால் மற்றும் இடுப்பு எலும்பு பகுதியில் தான் அதிக அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. மிக அரிதாகவே கை, மார்பு, தோள் ஆகிய இடங்களில் உள்ள எலும்புகளிலும், அதனை சுற்றியுள்ள மென்மையான திசுக்களிலும் ஏற்படுகிறது.
கை, கால், மார்பு ,இடுப்பு ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் கட்டி , எலும்பு வலி, வலி ஏற்படும் இடத்தில் வீக்கம் அல்லது மென்மை, காய்ச்சல், சோர்வு , திடீர் உடல் எடை குறைவு ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இவர்கள் உடனடியாக வைத்திய நிபுணர்களை சந்தித்தால் அவர்கள் எக்ஸ்ரே - எம் ஆர் ஐ ஸ்கேன் - சி டி ஸ்கேன் - பெட் ஸ்கேன் - போன் ஸ்கேன்- பயாப்ஸி எனப்படும் திசு பரிசோதனை- மரபணு பரிசோதனை - ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, கீமோதெரபி, சத்திர சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ வழங்கி நிவாரணத்தை வழங்குவர்.
இத்தகைய சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை ஏற்றுக் கொண்டால் பாதிப்பை மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் வெங்கடேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM