(நெவில் அன்தனி)
அபுதாபி ரி10 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய புனெ டெவில்ஸ் அணியின் முன்னாள் உதவிப் பயிற்றுநர் சனி டிலொனுக்கு ஐசிசியினால் சகல வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஆறு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை டிலொன் மீறிமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்ட 2023 செப்டெம்பர் 13ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுலுக்கு வருகிறது.
2021இல் நடைபெற்ற அபுதாபி ரி10 போட்டியின்போது ஊழல் தடுப்புச் சட்டக் கோவைகளை மீறியதற்காக பங்களாதேஷ் சகலதுறை வீரர் நசீர் ஹொசெய்ன் உட்பட கடந்த வருடம் குற்றஞ்சாட்டப்பட்ட எட்டு பேரில் டிலொனும் அடங்குகிறார்.
புனே டெவில்ஸின் இணை உரிமையாளர்கான கிரிஷான் குமார் சௌத்ரி, பராக் சங்வி, இரண்டு உள்ளூர் வீரர்கள், அவர்களது துடுப்பாட்டப் பயிற்றுநர் அசார் ஸய்தி, அணி முகாமையாளர் ஷதாப் அஹமத் ஆகியோரே அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களாவர்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டதனையும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு சட்டக் கொவையை மீறியதை ஒப்புக்கொண்ட தனையும் அடுத்து ஹொசெய்னுக்கு கடந்த ஜனவரி மாதம் 2 வருடத் தடை விதிக்கப்பட்டதுடன் ஸய்திக்கு 5 வருடத் தடையும் சங்வி, சௌதரி ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2 வருடத் தடை விதிக்கப்பட்டது.
புனே டெவில்ஸ் அணி கடைசியாக 2021 அபு தாபி ரி10 கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM