(எம்.வை.எம்.சியாம்)
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை துணிகள் சீன தூதுவரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்குவதில் சீனாவின் ஒத்துழைப்பு அளப்பரியது என சுட்டிக்காட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான 4,640,086 பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 11,817 மீற்றர் (மில்லியன்) பாடசாலை சீருடை துணிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் அண்மையில் உறுதியளித்திருந்தது.
குறித்த பாடசாலை சீருடை துணிகளை மூன்று கட்டங்களாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய பாடசாலை சீருடை அடங்கிய முதல் இரு கொள்கலன்கள் கொண்ட சீன கப்பல் நாட்டை வந்ததடைந்ததுடன் மூன்றாவது கொள்கலன் அடங்கிய கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் வைத்து சீன தூதுவர் கீ ஜெங் ஹாங்வினால் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது. சீன தூதுவர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
எமது நாட்டிற்கு கல்வி மிகவும் முக்கியமானது. எமது அரசாங்கமும் அதற்கு முன்னுரிமை அளிக்கிறது. எமது நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி ஒரு அடிப்படை வழியாக காணப்படுகிறது. எந்தவொரு சமூக - பொருளாதார வேறுபாடு அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கல்வியை அணுக கல்வியில் முதலீடு செய்வது அவசியமாகும். அதற்கான பல கருத்திட்டங்களை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்குவதில் சீனாவின் ஒத்துழைப்பு அளப்பரியது. காரணம், நாம் இதற்கு நிதி திரட்ட வேண்டி ஏற்பட்டிருக்கும்.
அடுத்த வருடத்துக்கு அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர சேனவிரத்ன, கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM