சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா நேற்று செவ்வாய்க்கிழமை (10) விஜயம் செய்தார்.
அதன்போது, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் G. ரஜீவ்வை சந்தித்து வைத்தியசாலை தொடர்பாக கலந்துரையாடியதுடன் சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் இரத்த வங்கி போன்றனவற்றின் தொழிற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் வினைத்திறனாக்குவது தொடர்பிலும் நடமாடும் சேவைகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்தியர்கள், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தேவைகளுக்கும் அத்தியாவசிய விடயங்களுக்கும் கிளிநொச்சி சுகாதார திணைக்களத்தின் பங்களிப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM