(ந.ஜெகதீஸ்)

டெங்கு நோயை கட்டுப்படுத்த தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் குறுகிய கால செயன்முறைகள் எவையும் ஒருபோதும் பயனளிக்காது. டெங்கு நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய தேசிய  கொள்கைகள் வகுக்கப்பட்டால் மாத்திரமே இப்பிரச்சிணைக்கு தீர்வுகான முடியும் என உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்தது.

மேலும் டெங்கு நோயை கட்டுப்படுத்த விரைந்து செயற்படாதபோது அப்பாவி பொதுமக்களே அதன் விளைவை அனுபவிக்கக்கூடும் எனவும் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் செயலாளர் சமன்மல்லி குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.