புத்தளத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

11 Dec, 2024 | 11:42 AM
image

புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். 

சந்தேக நபர் கடந்த 09 ஆம் திகதி தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து 800,000 ரூபா பணம் மற்றும் 1,490,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், தங்கச் சங்கிலி , தங்கத் தோடுகள், தங்க மோதிரம், தங்க வளையல் மற்றும் 461,950 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00